• Wed. Dec 11th, 2024

அதிகரிக்கும் நிலக்கரி கையிருப்பு – மத்திய அமைச்சர் தகவல்!..

Byமதி

Oct 14, 2021

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மின்சார உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.

இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் 3 நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தியை பார்வையிடுவதற்காக நிலக்கரி துறை மந்திரி பிரகலாத் ஜோஷி பிலாஸ்பூருக்கு சென்றார்.

அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நிலக்கரி பிரச்சினையில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. மின்சார உற்பத்திக்கு இன்றைய தேவை 11 லட்சம் டன் நிலக்கரி. ஆனால், நாங்கள் 20 லட்சம் டன் நிலக்கரி வினியோகித்து இருக்கிறோம். இதனால், நிலக்கரி கையிருப்பும் அதிகரித்து வருகிறது. எனவே, மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கிடைப்பதில் பிரச்சினை இருக்காது.

அனல்மின் உற்பத்தி நிலையங்களுக்கு நாள் ஒன்றுக்கு 19 லட்சம் டன் நிலக்கரியும், 20-ந் தேதிக்கு பிறகு, நாள் ஒன்றுக்கு 20 லட்சம் டன் நிலக்கரியும் வினியோகிக்குமாறு மத்திய மின்துறை அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், எங்கள் நிலக்கரி அமைச்சகம் நேற்று முன் தினம் ஒரே நாளில் 20 லட்சம் டன் நிலக்கரி வினியோகித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.