திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்து முன்னணி சார்பில் சென்னை மதுரவாயல் பகுதியில் நடைபெற்ற இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயண நிறைவு விழாவில் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து கனல் கண்ணன், பெரியார் குறித்து அவதூறாக பேசும் வீடியோ காட்சி, சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில், இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிட கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
போலீஸ் தேடுவதை அறிந்து தலைமறைவான கனல் கண்ணன் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவரது முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் கனல் கண்ணன் புதுச்சேரியில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் புதுச்சேரி சென்று அவரை செய்தனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று நீதிமன்றம் விடுமுறை என்பதால் நீதிபதியின் வீட்டில் அவரை ஆஜர்ப்படுத்த உள்ளனர்.