அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்வெளியாகிஉள்ளது.
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது போன்ற பொதுக்குழு முடிவுகளுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பொதுக்குழு தொடர்பான வழக்கை மீண்டும் விசாரணை நடத்த அறிவுறுத்தியது.
இதன்படி வழக்கு விசாரணை கடந்த வாரம் 2 நாட்கள் நடைபெற்றது. கடந்த 11-ந்தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இருதரப்பு வக்கீல்களும் காரசாரமாக தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர். இதனை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.