• Tue. Mar 21st, 2023

கபடி விளையாடிய இளைஞர் பலி

ByA.Tamilselvan

Jul 26, 2022

கபடி விளையாடிய இளைஞர் திடீரென சுருண்டுவிழுந்து பலியான சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர், பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவில் வசித்து வருபவர் விமல்ராஜ் (21). கபடி விளையாட்டு வீரரான இவர் சேலம் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படித்து வந்தார் .
இந்த நிலையில் நேற்று இரவு பண்ருட்டி அடுத்த மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் விமல்ராஜ் கலந்து கொண்டு விளையாடியபோது எதிர்பாராத விதமாக கீழே சுருண்டு விழுந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் உடனடியாக விமல்ராஜை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *