• Fri. Jun 13th, 2025
[smartslider3 slider="7"]

வரும் செப்டம்பர் மாதம் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு…

Byகாயத்ரி

Jul 26, 2022

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. முன்னதாக ஷின்சோ அபே இம்மாதம் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் உலக முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமரின் இறுதிச்சடங்கு தொடர்பாக, ஜப்பான் தூதரக உறவு கொண்டுள்ள ரஷ்யா உட்பட அனைத்து நாடுகளுக்கும் இதனை தெரிவித்திருப்பதாக அந்நாட்டு கேபினட் துணை தலைமைச்செயலாளர் தெரிவித்தார். மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்துகொள்ள மாட்டார் என ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இறுதிச் சடங்கில் பங்கேற்பது குறித்து ரஷ்யா இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று கூறினார்.