• Mon. Mar 27th, 2023

வள்ளலார் சத்திய ஞானசபையில் தைப்பூசத்திருநாளில் ஜோதி தரிசனம்

Byகாயத்ரி

Jan 18, 2022

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் ஆண்டு தோறும் தைப்பூச விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தைப்பூசப் பெருவிழா ஜோதி தரிசனத்தில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை.

உள்ளூர் நபர்கள் அன்னதானம் பார்சல் மூலமே வழங்க வேண்டும் என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தைப்பூசத்தின் முக்கிய நிகழ்ச்சியான ஜோதி தரிசனம் இன்று காலை 6 மணிக்கு காட்டப்பட்டது. பக்தர்கள் இன்றி 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 ஆகிய நேரங்களில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *