• Sun. Dec 3rd, 2023

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.. ஓபிஎஸ் அறிவிப்பு!!

Byகாயத்ரி

Sep 2, 2022

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஓபிஎஸ் அறிவிப்பு.

தேனி பெரியகுளத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு குறித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் தெரிவித்துள்ளார். ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், 2 நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் மூலம், ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *