• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜே.சி.பி. வாகனங்கள் வேலைநிறுத்தம்..!

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், உதிரி பாகங்களின் கடுமையான விலை உயர்வை கண்டித்தும் எர்த்து மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 2000 ஜேசிபி வாகனங்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் கட்டுமான பணிகள் முடங்கியது.


பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் இன்று பெட்ரோல் டீசல் மற்றும் வாகனங்களின் உதிரிபாகங்கள் கடுமையான விலை உயர்வு காரணமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில், 13 இடங்களில் ஜேசிபி வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைத்து, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட எர்த்து மூவர்ஸ் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்டு வருகின்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாகர்கோவில் வடசேரியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களை ஒரே இடத்தில் வரிசையாக நிறுத்தி வைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பழைய வீடுகளை இடித்து மண்களை மாற்றும் போது போலீசார் வந்து அத்துமீறி வாகனங்களை பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் தொழிலில் மிகப் பெரிய ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எர்த்து மூவர்ஸ் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர் வேதனை தெரிவித்தனர்.
விசுவல்;

  1. நாகர்கோவில் வடசேரியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களை ஒரே இடத்தில் வரிசையாக நிறுத்தி வைத்து நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டம்,
  2. பேட்டி; செல்வ மதன் ( இணை செயலாளர் – குமரி மாவட்ட எர்த்து மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்கம் )