விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி உத்தரபிரதேசம் லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது அவர்கள் மீது காரை ஏற்றி படுகொலை செய்த மத்திய உள்துறை அமைச்சர் ஆசிஸ் மித்ராவின் மகன் அஜய் மித்ரா மீது வழக்குத் தொடுத்து உச்ச நீதிமன்றம் தலையிட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அகில இந்திய புரட்சிகர பெண்கள் அமைப்பின் தலைவர் புவனேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.