மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் இன்று கரடிக்கலில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆணைக்கினங்க விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக மோர் பந்தல் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கழக அவைத்தலைவர், அரசு வழக்கறிஞர் திரு.எஸ்.ஆர்.விஜயக்குமரன் அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மற்றும் மாவட்டகவுன்சிலர், விருதுநகர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர், திரு.கே.ஏ.மச்சராஜா, வடக்கு ஒன்றிய கழக அவைத்தலைவர், ஒன்றிய கவுன்சிலர் திரு.சி.சுந்தரபாண்டியன், வடக்கு ஒன்றிய சிறும்பான்மை பிரிவு செயலாளர் திரு.காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடு விருதுநகர் ஒன்றிய அவைத்தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் கரடிகல் ஜல்லிக்கட்டு விழாகுழுத்தலைவர் திரு.சி.சுந்தரபாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.
