• Tue. Apr 23rd, 2024

சேலத்தில் மாஸ் காட்டும் சசிகலா.கலக்கத்தில் ஈபிஎஸ்

சேலம் மாவட்டத்துக்கு சசிகலா வருகையால் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலி அருகே சென்ற சசிகலா, காலச்சூழல் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார். பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைவாசம் அனுபவிக்க சென்றுவிட்டார். இந்த நிலைலயில், அரசியல் நிகழ்வுகளில் நிலைநிற்க முடியாமல் தனித்துவிடப்பட்டுள்ளார் சசிகலா. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு தமிழகம் முழுவதும் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள், நிர்வாகிகள் பலரையும் தன்வசம் இழுக்க சசிகலா முயன்று வருகிறார். சசிகலா மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணம் அதிமுக தலைவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் தனது அரசியல் பயணத்தை நாளை சசிகலா தொடங் உள்ளார்.

நாளை சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்துக்கு வரும் சசிகலாவுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து சசிகலா ஆதரவாளர்கள் அதிமுக பெயரில் உற்சாக வரவேற்பு அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் சசிகலா தனது ஆதரவு வட்டத்தை விரிவாக்கும் செய்யும்விதமாக மேற்கொண்டுள்ள இப்பயணத்தால் பழனிசாமியின் ஆதரவாளர்கள் பெரும் சங்கடத்துக்கு உள்ளாகியுள்ளனர். சசிகலாவை வரவேற்று ஒட்டியுள்ள போஸ்டரில் அதிமுகவை சேர்ந்த அவரின் ஆதரவாளர்கள் ‘தியாகத்தாயே… அதிசயமே… பலர் வெளிச்சத்திற்கு வர காரணமாக இருந்த தியாகத் தாயே… தலைவியே’ என்று புகழ்ந்து போஸ்டர் அடித்துள்ளனர்.

சசிகலா ஆதரவாளர்கள் என வெளிப்படையாக பெயர் சொல்லும்படி சேலத்தில் இதுவரை யாரும் இல்லாத நிலையில், சசிகலாவின் ஆதரவாளரின் ஒருவரான கலைவாணி என்ற பெயரில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்களில் உள்ள வரிகளும் வார்த்தைகளும் அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *