• Wed. Apr 17th, 2024

மதுரை ஆதினத்தின் மீது பாய்ந்துவிடுவோம் என்பது கண்டனத்துக்குரியது

ByA.Tamilselvan

Jun 10, 2022

மதுரை ஆதினம் எந்த அரசியல் கட்சிகளுக்கும் எதிரானவர்கள் இல்லை என்றும் அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஒரு நாளும் சொன்னதில்லை எனவும் தமிழக அமைச்சர் ஒருவர் அவர் மீது பாய்ந்து விடுவோம் என்று அபாயகரமான கருத்தை சொல்லி இருப்பது கண்டனத்துக்குரியது என அர்ஜுன் சம்பத் மதுரையில் பேட்டி
மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு தர வேண்டி மதுரை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் அர்ஜுன்சம்பத் மனு அளித்தார் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்
மதுரை ஆதினம் அவர்களுக்கு தற்போது அரசியல்வாதிகளாலும் நடிகர்களின் ரசிகர்களும் இன்னபிற சக்திகளாலும் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறார்.மதுரை ஆதீன மடத்திற்கு குரு சன்னிதானத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.மதுரை ஆதீனம் அரசியல்வாதிகளைப் போல் நடந்து கொள்ளுகிறார் என்றும் நாங்கள் அவர் மீது பாய்ந்து விடுவோம் என்று அறநிலை துறை அமைச்சர் குரு சன்னிதானத்தை அச்சுறுத்தி வருகிறார் இதுஒரு அபாயகரமான போக்கு. மதுரை ஆதீனத்திற்கு அரசியலுக்கும் பெரிய தொடர்பு கிடையாது அவர் அரசியல் பேசவில்லை
இந்து சமய நம்பிக்கைகள் இழிவுபடுத்தப்பட்டு உள்ளது. சிதம்பர நடராஜ பெருமானை இழிவுபடுத்தி கருத்துக்களை வெளியிட்டவர்கள் கைது செய்யப்படவில்லை.திரைப்படங்களில் இந்து மத சமய கடவுள்களை இழிவு படுத்த படுகிறது.இந்து சமயத்திற்கு ஒரு வில்லங்கம் என்றால் மதுரை ஆதினம் குரல் கொடுப்பார் அதிமுகவிற்கு ஆதரவா இருப்பார் பிஜேபி ஆதரவாளார்.என்பதெல்லாம் கிடையாது.இந்து மத சமய நம்பிக்கைகள் சீர் குறைவதும் கோவில்கள் அறநிலையத் துறையில் பிடியில் இருப்பதும் 50 வருடங்களாக இருந்து வருகிறது இது தொடர்ந்து வலியுறுத்தி வரக்கூடிய கருத்து இந்தக் கருத்தைத்தான் வெளிப்படுத்தியுள்ளார் மதுரை அதிகம் அதிமுக காலகட்டங்களிலும் வெளிப்படுத்தியுள்ளார்.இந்த கருத்து நடிகர் விஜய்க்கு அல்லது அரசியல்வாதிகளுக்கு எதிரான கருத்து கிடையாது இது விஜய் ரசிகர்கள் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது விஜய் ரசிகர்கள் ஆதீனத்தின் மீது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுகின்றனர் தாய் தகப்பனை விட நடிகர் விஜய் பெரிய நபர் ஒன்றும்கிடையாது விஜய் தன் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும்

எப்பொழுதும் போல மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் வழியிலே தன் பணிகளை செய்து வருகிறார் இந்து சமய அமைப்புகள் அவருக்கு ஆதரவாக உள்ளது அவர் எல்லா ஆன்மீக சமய அமைப்புகளையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்.அறநிலையத் துறை அமைச்சரே பாய்வோம் என்று சொல்லியுள்ளார் ஆகைய காரணத்தால் மத்திய அரசு மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.சு வெங்கடேசன் துவங்கி வைத்த செஞ்சட்டை பேரணியில் பல்வேறு அருவருக்கத்தக்க கருத்துக்கள் வெளியாகி உள்ளது இது கண்டனத்துக்குரியது இந்த கருத்துக்கள் மூலமாக மிகப்பெரிய வருத்தத்தில் உள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் கொடுத்துள்ளோம் ஆனால் அவர்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .சு.வெங்கடேசனும் மதுரை ஆதீனத்தை மிரட்டுவது போல் பேசி வருகிறார் அவருக்கும் எனது வன்மையான கருத்துக்களை தெரிவித்து கொள்கிறேன்
ஆவின் நிறுவனத்தில் ஏன் இனிப்பு வாங்கவில்லை என்று சுட்டிக் காட்டினோம் உடனடியாக ஆவின் நிறுவனத்தில் இனிப்புகளை வாங்குங்கள் என்று ஸ்டாலின் உத்தரவிட்டார்
பால் பவுடர் ஊட்டச்சத்து அது ஆவின் நிறுவனத்தில் வாங்கலாம் வாங்கினால் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிற போதும்.செவிலியர்கள் உரிமைக்குப் போராடும் அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கை கண்டனத்துக்குரியது.தமிழக அரசாங்கம் எதிர்க்கட்சியாக இருந்த பொழுது இவற்றிற்கெல்லாம் போராடியது ஆனால் தற்சமயம் ஆளும் கட்சியாக மாறிய உடன் போராட்டக்காரர்களை கைது செய்வது ஏன்

தமிழகத்தில் கஞ்சா விற்பனை மிக மோசமாக சென்றுகொண்டிருக்கிறது சைலேந்திரபாபு கஞ்சா வேட்டை என்பதை ஆரம்பித்துள்ளார் அது வரவேற்கக் கூடியது அதற்கு பல்வேறு முயற்சிகளை எடுக்க வேண்டும்மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்.எல்கேஜி யுகேஜி படிப்பை மூட வேண்டும் என்று எண்ணினார்கள் தங்கள் போராட்டங்களின் மூலமாக அதை திரும்பப் பெற்றுள்ளது வரவேற்கக் கூடிய ஒன்று.எந்த ஒரு கருத்துக்களும் திமுகவுக்கு எதிரான தல்ல உங்கள் கொள்கைகளுக்கு மாறுபட்டவர்கள் தான் நாங்கள் .மதுரை ஆதீனம் ஆர் எஸ் எஸ் க்கு சாதகமாக இருக்கிறார் என்பது அவர்கள் சொல்லகூடிய குற்றச்சாட்டு முழுவதும் பொய்யான ஒன்று
ஆதீனம் எந்த விதத்திலும் சர்ச்சைக்கு உள்ளான கருத்துக்களை சொல்லவில்லை கோயில்களை விட்டு அறநிலைத்துறை வெளியேற வேண்டும் என்று ஆதினம் சொல்லி வருகிறார் இது எப்போதுமே சொல்லப்படக்கூடிய தான் இந்த கருத்து எல்லா காலகட்டத்திலும் சொல்லப்பட்டது அதிமுக ஆட்சி கால கட்டங்களிலும் சொல்லப்பட்டு வருகிறது.சர்ச்சு சொத்து கிறிஸ்துவிடம் முஸ்லிம் சொத்து முஸ்லிம்களிடமும் இருக்கிற பொழுது ஏன் ஆலய சொத்துக்கள் மட்டும் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும் எங்களது உரிமைக் குரலாக ஆதினம் இருந்து வருகிறார்
திமுகவோடு மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம் அல்ல
மதுரை ஆதீனத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்த வேண்டும் என்பது எங்களது எண்ணம் அதற்கு மாநில அரசு கொடுக்கவில்லை என்று சொன்னாலும் மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று தெரிவித்தார்.மதுரை ஆதீனம் எந்த கட்சிக்கும் எதிரானவர் அல்ல மதிமுக திமுக பிரமுகர் களின் திருமணத்திற்கு சென்று வருகிறார் மதுரை ஆதீனம்
அதிமுகவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மதுரை ஆதீனத்தை பற்றிப் பேசிய அமைச்சர் சந்திரபாபுவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமைச்சருக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார் ஆதலால் அதிமுகவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *