• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

வணிகரீதியான விண்வெளி புரட்சிக்கு தயாரான இஸ்ரோ..!

Byவிஷா

Apr 19, 2023

சமீபகாலமாக இஸ்ரோ பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் நிலையில், தற்போது வணிகரீதியான விண்வெளிப் புரட்சிக்கு தயாராகி உள்ளது.
வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி, பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது. இந்த பரிசோதனையை ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ஷார்மில் இருந்து நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வரும் 22ஆம் தேதி பிற்பகல் 2.19 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். சிங்கப்பூர் செயற்கைக்கோள் அனைத்து வானிலை செயற்கைக்கோள் படங்களையும் படம்பிடிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.