மதுரையில் தமிழ்நாடு நுகர்வோர் வணிக கழகத்திற்கு நெல்மூட்டை ஏற்றி வந்த லாரி சுவற்றில் மோதி விபத்து – கடுமையான போக்குவரத்து நெரிசல்!!
தமிழ்நாடு நுகர்வோர் வணிக கழகம் சார்பாக மாவட்டத்தில் பத்திற்கு மேற்பட்ட தனியார் ரைஸ் மில்களுக்கு நியாய விலை கடைகளுக்கு வழங்கக்கூடிய நெல் மூட்டைகளை அரிசியாக அரைக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது
இந்த நிலையில் மதுரை மாநகர் கோமதிபுரம் பகுதியில் உள்ள தனியார் மில்லுக்கு தினமும் 50க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் நெல் மூட்டைகள் கொண்டுவரபடுகிறது.இதனால் அந்த பகுதியில் சாலைகள் அவ்வபோது சேதம் அடைந்து விடுவதாகும் விபத்து அதிக அளவு நடப்பதாக தொடர்ந்து அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி ஒன்று நிலைத்தடுமாறி கோமதிபுரம் ஆறாவது மெயின் ரோடு பகுதியில் மருத்துவமனை சுவற்றில் மோதி நின்றது .இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .சுமார் 2 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கக்கூடிய நிலை ஏற்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தனியார் ரைஸ் மில்லின் நிர்வாகத்தினர் கிரேன் மூலம் லாரியை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினார்கள்.மேலும் அதிக அளவு பாரம் ஏற்றி வந்த லாரி மீதும் தனியார் ரைஸ்மில் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது…