இமாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது குறித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அவர்கள் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ஜெயராம் தாகூருக்கு பதிலாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக நியமிக்க பாஜக திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வளர்ந்து வரும் புகழ் காரணமாக, அவர்களுக்கு தேர்தலில் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பாஜக பெரிய மாற்றத்தை தங்கள் கட்சிக்குள் செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.