ஜம்மு காஷ்மீரில் பள்ளிக்கு திலகம் அணிந்து வந்த இந்து மாணவிகளை ஆசிரியர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் ஹடுரீன் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த பள்ளியில் படிக்கும் 4 இந்து மாணவிகள் நெற்றியில் திலகமிட்டு பள்ளிக்கு சென்றுள்ளனர். மத அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக திலகம் இட்டிருந்ததற்காக அவர்களை அந்த பள்ளியில் பணிபுரியும் நசீர் அகமது என்ற ஆசிரியர் அடித்ததாகவும், கொச்சையான வார்த்தைகளால் திட்டியதாகவும் மாணவிகளின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளிக்கு வந்த அந்த பெண்களின் வீடுகளில் இந்து மத பண்டிகையான நவராத்திரி கொண்டாடப்பட்டதாகவும், அதனால் அவர்கள் திலகம் அணிந்து சென்றதாகவும் கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.