• Sat. Feb 15th, 2025

முதல்வரின் துறைக்கே இந்த நிலையா?… குமுறும் பெண் காவலர்கள்!..

By

Aug 23, 2021

ராயபுரம் மன்னார்சாமி கோயில் சாலையில் உள்ள காவல் நிலையம் சுதந்திரத்திற்கு முன்பு 135 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த ஓடு மூலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு காவலர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு மட்டுமே அர்தொன் ரோட்டிலுள்ள ஒரு கிரவுண்டு நிலத்தில் காவல் நிலையம் அமைத்து உள்ளனர்.

வடசென்னையில் தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் மற்றும் பல பகுதிகளில் சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு போக்குவரத்து அனைத்து மகளிர் மற்றும் காவல் பிரிவு ஒரே கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஆனால் ராயபுரத்தில் பழைய கட்டிடத்தை சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற பிரிவு ஆகிய காவலர்களுக்கு மட்டுமே உள்ளது என காவலர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

மேலும் கடந்த ஆட்சியில் போக்குவரத்து உதவி ஆணையராக இருந்த ராஜகோபால் முயற்சியில் ஹூண்டாய் கார் கம்பெனி மூலம் பழைய காவல்நிலையத்தை சீரமைக்க 50 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அவர் பணியிட மாற்றப்பட்ட காரணத்தினால் அந்த நிதி வேறு நலத் திட்டத்திற்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும் மிகவும் சிரமத்துக்கு ஆளாகும் நிலையில் பெண் காவலர்கள் கழிப்பறை இன்றி அவதிபடுவதாக தெரிவித்தனர்.

இன்று காலை பெய்த மழையின் காரணமாக பால் சீலிங் உடைந்து உள்ளதால் அங்கு வைத்துள்ள கம்ப்யூட்டர் மற்றும் இதர பொருள்கள் மீது மழை நீர் உள்ளே புகுந்து சேதப்படுத்தியதாகவும், எந்த நேரத்திலும் இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளதால் உயிர் இழப்பு ஏற்படுவதற்கு முன்பாக உடனடியாக அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பிரிவு என்பதால் காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் இது சம்பந்தமாக எந்தவித கோப்புகளையும் அரசிடம் தெரிவிக்காமல் தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.