பிரதமர் மோடி இந்த மாதத்தில் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டுப் பயணங்களை பிரதமர் மோடி தற்காலிகமாக ரத்து செய்துள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவுக்கு 2 நாட்கள் பயணமாக செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், வரும் 23, 24ஆம் தேதிகளில் அவர் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும், நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமில்லா உறுப்பினராக இருக்கும் இந்தியா, கடந்த ஒரு மாதமாகத் தலைமை வகித்தது. ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றிய சமயத்தில் தீர்மானமும் இந்தியா தலைமையில் பாதுகாப்பு கவுன்சலில் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் மோடியின் பயணம் உறுதியானால், அதிபர் ஜோ பைடன் பதவி ஏற்றபின் இருவரும் முதல் முறையாக நேரடியாகச் சந்திப்பார்கள்.