• Thu. Dec 12th, 2024

ஐபிஎல் 2025 ஏல தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Byவிஷா

Nov 6, 2024

ஐபிஎல் 2025 சீசனை முன்னிட்டு, வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான ஏல தேதி குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில்..,
வரும் நவம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. சவுதி அரேபியாவின் ஜெடா நகரில் இந்த ஏலம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏலத்தில் பங்கேற்க சர்வதேச அளவில் இருந்து மொத்தம் ஆயிரத்து 574 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். அதில், ஆயிரத்து 165 இந்திய வீரர்களும், 409 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். மேலும், முன்பதிவு செய்தவர்களில் 320 பேர் மட்டுமே சர்வதேச போட்டிகளில் அறிமுகமானவர்கள் ஆவர். மீதமுள்ள ஆயிரத்து 224 பேர் அன் – கேப்ட் வீரர்கள் ஆவர். 30 வீரர்கள் அசோசியேட் நாடுகளை சேர்ந்தவர்களாவர். இந்த ஏலத்தில் 204 வீரர்கள் மட்டுமே 10 அணிகள் சார்பில் ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.