

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாதோப்பு தனியார் திருமண மண்டபத்தில் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் தமிழழகன் புதியதாக தற்பொழுது நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை அறிமுகம் செய்யும் இந்த கூட்டத்திற்கு பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாவட்ட தலைவரை கட்சியினருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் கட்சியினர் மத்தியில் வினோஜ் பி.செல்வம் பேசுகையில்..,

திமுகவிற்கு எப்பொழுதெல்லாம் தோல்வி பயம் வருகிறதோ அப்போதெல்லாம் இந்தி மொழியை கையில் எடுத்து அரசியல் செய்வதாகவும், ஆனால் இந்த முறை மக்கள் ஏமாற தயாராக இல்லை என்பதையும் புதிய கல்விக் கொள்கையில் இந்தி என்பதே கிடையாது மூன்றாவதாக ஒரு விருப்பமொழி கற்றுக்கொள்வதே புதிய கல்விக் கொள்கை என்றும் அதேபோன்று மாநிலம் முழுவதும் பாலியல் பலாத்காரம் கூட்டு பலாத்காரம் அதிகரித்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகவும் தப்பு செய்பவர்கள் ஒவ்வொருவரும் பின்னணியிலும் ஒரு திமுக காரன் இருக்கிறான் என்றும் திமுக என்பது தப்பு செய்பவர்கள் கேடயமாக இருப்பதாகவும். அதேபோன்று எப்படி ராகுல் காந்திக்கு பப்பு என்று பெயர் இந்தியா முழுவதும் பேமஸ் ஆனதோ அதேபோன்று தமிழகத்தில் நாம் பப்பு என்று நினைத்த ஒரு நபருக்கு பால்டாயில் பாபு என்ற பெயர் தற்போது பேமஸ் ஆகி உள்ளதாகவும் விவசாயிகளுக்கு பால் டாயில் பார்த்தால் உதயநிதி தான் நினைவுக்கு வரும் என்று பேசினார்.
தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் கட்சியினர் மத்தியில் உரையாற்றினார் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மிகுந்த பின் தங்கிய இந்த பகுதியில் மக்கள் வளர்ச்சிக்காக, மாணவர் நலனுக்காக அயராது பாடுபட்ட நரேந்திர மோடி திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சென்று திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாற்று சக்தியாக குறிப்பாக இந்தப் பகுதி மக்களை பல ஆண்டு காலமாக ஏமாற்றி மாற்றமும், முன்னேற்றமும் கொடுக்காத விடுதலை சிறுத்தை கட்சியை புறந்தள்ளி பாரதிய ஜனதா கட்சி இந்தப் பகுதியில் முதன்மை கட்சியாக கொண்டு வருவதற்காக மாவட்ட தலைவர் அவர்கள் பாடுபட தயாராக உள்ளார்.
திமுக தலைவர்கள் முதன்முறையாக மிகுந்த பதட்டத்தோடு இருப்பதை காண முடிகிறது. மீடியாவை பார்த்து உளறுகிறார்கள். கேள்வி கேட்டால் சம்பந்தமே இல்லாமல் பதில் சொல்கிறார்கள். ஒரு படத்தில் சுந்தர்.சி – யை பார்த்து முடிந்தால் எங்க ஊருக்கு வா என வடிவேல் கூறுவர், பின்பு எங்க ஏரியாவுக்கு வா என கூறுவார், அப்புறம் என் தெருவுக்கு வாடா என்பார். அந்த காமெடி மாதிரி மரியாதைக்குரிய துணை முதலமைச்சர் அவர்கள், அண்ணாமலை அவர்களை அண்ணாசாலைக்கு வாடா என்றுள்ளார். அண்ணாசாலை என்பது உங்க அப்பன் வீட்டு சொத்து கிடையாது. அண்ணாசாலை நீங்கள் பிறப்பதற்கு முன்னால், உங்கள் தந்தை பிறப்பதற்கு முன்னால் பல ஆண்டு காலமாக அங்குள்ள ஒரு இடம். ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வந்து, போய்க் கொண்டு உள்ளார்கள். அங்கு ஒருவரை வா,போ என சொல்வதற்கு உங்களுக்கு உரிமை கிடையாது.
உங்களிடம், நீங்கள் நடத்தும் ஸ்கூலில் ஹிந்தி உள்ளது, ஏழை மாணவர்கள் படிக்க கூடாதா, அந்த ஹிந்தியை கூட கேட்காமல் மூணாவது மொழி படிக்கக்கூடாதா என கேட்டதற்கு அண்ணாமலை அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க சினிமா வசனம் பேசி போய் உள்ளீர்கள்.
துணை முதல்வர் அவர்களே நீங்கள் அரசியலில் நடிக்கவில்லை, உங்க அப்பா உங்களுக்கு பொறுப்பு வாங்கி கொடுத்துள்ளார். கொஞ்சமாவது அந்த பொறுப்புக்கு ஏற்ப ஊடகத்திடம் அல்லது மக்களிடம் பணி செய்வதை கடமையாக எடுக்க வேண்டுமே தவிர இப்படி பேசுவது முறையல்ல. நாகரிகமான அரசியலை கையில் எடுங்கள். தெரியவில்லை என்றால் பிஜேபியின் அடிப்படை தொண்டனிடம் கத்துக்கலாம். இதை நீங்கள் கையில் எடுக்காவிட்டால் உங்களுடைய பாதையில் நாங்களும் அரசியல் செய்ய நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக மாணவர்களுக்கு மும்மொழி கொள்கை தேவை, புதிய கல்விக் கொள்கை தேவை என்பதை வலியுறுத்தி பாஜக போராடும். தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய பாலியல் வன்கொடுமைகளை மறைப்பதற்காக மட்டுமே ஹிந்தி என்ற வார்த்தையை பயன்படுத்துறீங்க. மக்கள் ஏமாற தயாரா இல்லை. ஹிந்தி எதிர்ப்பு என்பது expired product. இதையெல்லாம் விட்டுவிட்டு இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப அரசியல் செய்ய வேண்டும். 2026 ல் பாஜக தலைமையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
மேலும், மும்மொழி கொள்கையை பாஜக கூட்டணி கட்சிகள் ஆதரிக்கிறீர்களா அவர்கள் நிலைபாடு பற்றிய கேள்விக்கு..,
பாஜக கூட்டணிக்காக கொள்கையை விட்டுக் கொடுக்கும் கட்சி கிடையாது. இதில் பாலிடிக்ஸ் கிடையாது. இதில் மாணவர் நலன் இருக்கிறது. ஆகவே மற்ற கட்சிகளுக்கும் புரிய வைத்து மக்களுக்கும் புரிய வைத்து புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என பேசினார்.

