• Fri. Mar 24th, 2023

மதுரையில் கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பா பேட்டி!

Byகுமார்

Sep 29, 2021

கர்நாடகா மாநில முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சருமான ஈஸ்வரப்பா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார், பின்னர் ஈஸ்வரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில் “கர்நாடகாவுக்கும் – தமிழ்நாட்டுக்கும் இடையே எந்தவொரு பிரச்சினையும் இல்லை, கர்நாடக மக்களும் – தமிழக மக்களும் சகோதர, சகோதரிகளாக உள்ளனர், காவிரி விவகாரத்தில் அரசியல்வாதிகளால் அரசியல் செய்யப்படுகிறது,

காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பை இருவரும் கடைபிடிக்க வேண்டும், காவிரி பிரச்சனையை அரசியல் பிரச்சனையாக மாற்றப்பட்டுள்ளது, சில நபர்கள் காவிரி விவகாரத்தில் வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்குகின்றனர், காவிரி நதிநீர் விவகாரத்தில் பிரச்சனையே இல்லை, தமிழகமும், கர்நாடகமும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க வேண்டும், காவிரி தூய்மையாக உள்ளது, காவிரி தமிழக விவசாயிகளையும், கர்நாடக விவசாயிகளையும் ஆசீர்வதிக்கும்” என கூறினார், மேகதாது அணை குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றார்

மதுரையில் கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பா பேட்டி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *