அரசு ஊழியர்கள் விருப்ப மாறுதல் கேட்டு விண்ணப்பித்தால் அது நிர்வாக நடைமுறைப்படி தான் நடைபெறும். ஆனால், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நிர்வாக நடைமுறையில் மாறுதல் வழங்க மாவட்ட நிர்வாகம் மறுத்து வருகிறது. அரசியல் சிபாரிசு செய்தவர்களுக்கு மட்டும் விருப்ப மாறுதலில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், அருப்புக்கோட்டை அல் அமீன் மேல் நிலை பள்ளியில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர் ஒருவருக்கு அரசியல் தலையீட்டால் மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

இதுபோல் பலருக்கு நடப்பதை அடுத்து ஆளும் கட்சியின் தலையீட்டால் வழங்கப்பட்ட மாறுதலை ரத்து செய்யக் கோரியும், அரசியல் நிர்பந்ததால் மாறுதல் வழங்குவதை கண்டித்தும், சத்துணவு ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும்,
கவுன்சிலிங் மூலம் மாறுதல் வழங்கக்கோரியும்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க்கயுள்ளனர் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம். இந்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை 3 மணியளவில் நடைபெறுகிறது.