• Fri. Apr 26th, 2024

மதுரையில் சர்வதேச செஸ் போட்டி துவக்கம்

Byகுமார்

Jul 3, 2022

தமிழ் மொழியினால் அடையாளப்படுத்தப்படுகிற தமிழக நிலவெளியில் மதுரை என்ற நகரம், ஒப்பீட்டளவில் தனித்துவமானது. வரலாற்றுப் பழைமையான இந்திய நகரங்களில் மதுரை நகரம் பண்பாட்டுச் சிறப்புடையது. சங்க காலத்திற்கு முன்னரே வைகை ஆற்றங்கரையில் செழிப்பான நாகரிகத்துடன் விளங்கிய மதுரை, தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று போற்றப்படுகிறது

சிறப்பு விருந்தினர் மற்றும் இன்ஸ்பயர் விருது பெற்றவர்க்கு பொன்னடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கெளரவித்த போது எடுத்த புகைப்படம்.


தமிழ்நாட்டில், மதுரையில் சர்வதேச செஸ் போட்டி தொடங்கி வைக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்ராக, மதிப்பு மிகு.பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி, இந்திய அறிவியல் தொழில் நுட்ப கழகத்தால், உயர்கல்வி துறையில் உயரிய விருதான இன்ஸ்பயர்(Innovation in Science Pursuit for Inspired Research (INSPIRE) விருது பெற்றவர், மத்திய அரசால் 2011 ஆண்டு வழங்கப்பட்டது இவ்விருது புவியியல் (Geoinformatics ) பாடத்திற்கு வழங்கப்பட்டது
மதுரையில் துவங்கிய ஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் 2-வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓபன் செஸ் போட்டியில் 15 நாடுகளைச் சேர்ந்த (A) Categoryயில் 202 பேர் திறந்த வகை (B) Categoryயில் 598 வீரர், மொத்தம் 800 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளன.

இந்த ஓபன் சர்வதேச செஸ் போட்டியினை மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகத்தின் நிதியும் வழங்கபட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு 15 நாடுகளை சேர்ந்த 5 வயது முதல் 65 வரை . வீரர்கள் விளையாடினர் மொத்தம் பரிசு தொகை 30 லட்சம் ரூபாய் 30 பேர் க்கு பிரித்து கொடுக்கப்படுகிறது போட்டி முடிந்து 5 தேதி பரிசு வாங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விருந்தினர்க்கு பொன்னடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கி கெளரவித்தவர் மதிப்புமிகு. .R.S. திவாரி, பொதுச் செயலாளர்,Botwinnik Chess Academy, புதுடெல்லி.இவ்விழாவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் P.பிரகதீஷ், N.லேகேஷ் மற்றும் வினோதகன், இணைச் செயலாளர்
2-வது ஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓபன் செஸ் போட்டி மதுரையில் நடைபெற்று வருகிறது.

இன்று துவங்கிய இத்தொடர் வரும் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கலந்த கொண்ட நாடுகள் இந்தியா, ரஷியா, பெலாரஸ், அமெரிக்கா, சிங்கப்பூர், வங்களாதேசம், ஸ்விடன், ஸ்ரீலங்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா , அமெரிக்கா, நேபால், வியாட்னம், ஆர்மோனிய கிர்கிஸ்தான் மற்றும் கலிபோர்னியா நாடுகள் உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த 800 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

சிறப்பு விருந்தினர், மத்திய அரசின் உயர்கல்வி துறையில் சிறந்த விருதான இன்ஸ்பயர் விருது பெற்றவர் உடன் ரஷியாவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் போரீஸ்வுடன் எடுத்த புகைப்படம்.

உலக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழ் நாட்டின் மதுரையே சோர்ந்த தீபன் சக்கரவர்த்தி, ரஷியாவை சேர்ந்த போரீஸ், பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அலெக்சி பெடரோ, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நீலோத் பல்தாஸ் மற்றும் 13 கிராண்ட் மாஸ்டர்ஸ், 13 சர்வதேச மாஸ்டர்ஸ், 2 பெண் கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளிட்ட தலைசிறந்த வீரர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். 10 சுற்றுகளாக நடைபெறும் இந்தத் தொடரில் முன்னிலை பெறும் வீரர்கள் கிராண்ட் மாஸ்டர் மற்றும் சர்வதேச மாஸ்டர் பட்டங்களைப் பெறத் தகுதி பெறுவர். இந்நிலையில் சர்வதேச அளவிலான இந்த போட்டியில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி, சானிடைசர் போன்றவை சரியான முறையில் தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *