

பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர்சர்மா வுக்கு கொல்கத்தா காவல்துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
முகமதுநபி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக வின் நுபுர் சர்மாவுக்கு எதிராக கொல்கத்தா காவல் துறையினர் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் உள்ள 2 காவல் நிலையங்களில் இந்த சர்ச்சை கருத்துக்கு எதிராக நுபுர்சர்மா மீது வழக்குகள் உள்ளது. இது குறித்து நேரில் அஜராகி விளக்கம் தரும்படி அவருக்கு சம்மன் அனுப்பட்டிருந்தது. ஆனால் அவர் இதுவரை விளக்கம் அளிக்காத நிலையில் இந்த லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
