• Sat. Apr 20th, 2024

இன்று வங்கதேசம் செல்கிறது இந்திய அணி ரோகித் முன் காத்திருக்கும் சவால் என்ன?

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக முற்றிலும் பலமான அணியை தேர்வு செய்து பிசிசிஐ அனுப்புகிறது. இந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி வீரர்கள் இன்று வங்கதேசம் செல்கிறது.
முதல் ஒருநாள் போட்டி வரும் 4ம் தேதி தொடங்குகிறது. இதனால் இரண்டு நாள் பயிற்சி செய்ய ஏதுவான நேரம் வீரர்களுக்கு கிடைக்கும். டி20 உலக கோப்பையில் அடைந்த தோல்விக்கு பிறகு சீனியர் வீரர்கள் முதல்முறையாக இந்திய அணிக்காக விளையாடுகின்றனர். வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது சற்று சிரமமான விஷயமாக இருந்தாலும் இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருக்கிறது.
எனினும் எதிரணியை குறைத்து மதிப்பிடக்கூடாது. இதனால் இந்திய அணி வீரர்கள் வங்கதேசம் தானே என்ன செய்யப் போகிறது என்று நினைத்தால் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலைமை தான் மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் அணியின் வீரர்களை ஒப்பிட்டால் வங்கதேசத்தை விட இந்திய அணி பல மடங்கு பலமான அணியாக விளங்குகிறது. ரசிகர்களே ஏன் வங்கதேச தொடருக்கு டாப் வீரர்களை பிசிசிஐ அனுப்புகிறது என்று கேள்வி கேட்கும் அளவிற்கு தேர்வுக் குழுவினர் தரமான அணியை இறக்கி இருக்கிறார்கள்.
இந்த தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பெரிய தலைவலியை கொடுக்கப் போவது பிளேயிங் லெவனை தேர்வு செய்வது தான். ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் என தொடக்க வீரர்கள் களமிறங்க விராட் கோலி மூன்றாவது இடத்திலும் கே.எல்.ராகுல் நான்காவது இடத்திலும் விளையாடுவார்கள். ஐந்தாவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும் ஆறாவது இடத்தில் ரிஷப் பண்டும் விளையாட அதிகம் வாய்ப்புள்ளது.
ஏழாம் இடத்தில் வாஷிங்டன் சுந்தரும், எட்டாவது இடத்தில் அக்சர் பட்டேலும் விளையாடுவார்கள். வேகப்பந்து பேச்சாளர்களாக தீபக்சாகர், முகமது சமி, முகமது சிராஜ் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. இந்த தொடரில் சாகல் குல்தீப் யாதவ் என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *