• Fri. Apr 26th, 2024

சூர்யகுமார் மோசமாக ஆட தவான் தான் காரணம் – சல்மான் பட்

அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் மோசமாக விளையாட தவான்தான் காரணம் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 கிரிக்கெட் தொடரில் 1 – 0 என வெற்றி பெற்று கைப்பற்றியது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1 – 0 என தோல்வியடைந்தது.
இந்த தொடரின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை இந்திய ரசிகர்களிடம் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் ரிஷப் பண்ட்-க்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது தான்.
நியூசிலாந்துடனான டி20 மற்றும் 50 ஓவர் என இரண்டு தொடர்களிலுமே வாய்ப்பு பெற்ற ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் கூட சிறப்பாக விளையாடவில்லை. இவருக்காக சஞ்சு சாம்சனை கழட்டிவிட்டனர். இதுமட்டுமல்லாமல் ஒருநாள் தொடரில் சூர்யகுமார் யாதவை கூட கண்டுக்கொள்ளாமல் ரிஷப் பண்ட்-க்கு முக்கியத்துவம் கொடுத்து டாப் ஆர்டரில் களமிறக்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் பேசியுள்ளார். அதில், ரிஷப் பண்ட் ஒரு அதிரடி வீரர். நிறைய சுதந்திரங்கள் கொடுக்கப்பட்டு களமிறங்கிய போதும், எதிர்பார்த்த செயல்பாட்டை அவர் கொடுக்கவே இல்லை. ஆனால் இப்படிபட்ட ஒருவர் ஏன் சூர்யகுமாருக்கு முன்னரே களமிறங்கினார் என்பது தான். நல்ல பார்மில் இருக்கும் வீரரின் இடத்தில் பார்மிலேயே இல்லாத ஒரு வீரரை களமிறக்குவது எந்தவிதத்தில் சரியாகும். இது அவரின் ஆட்டத்தை பெரியளவில் பாதிக்கும்.
இடங்களை மாற்றி களமிறக்கப்பட்டதால் சூர்யகுமாரின் ஸ்கோர் முற்றிலும் குறைந்தது. முதல் போட்டியில் 4, அதன்பின்னர் 34, 6 என சொற்ப ரன்களையே அடித்தார். அந்த 34 ரன்களும் 2வது போட்டி 29 ஓவர்களாக குறைக்கப்பட்ட பின்னர் தான் அடித்தார். இதனால் அவருக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தின் மீது சூர்யகுமாருக்கு ஆர்வம் குறையலாம் என சல்மான் பட் விளாசியுள்ளார்.
இந்திய அணி அடுத்ததாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான அணியில் சூர்யகுமார் யாதவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதனை சரியாக பயன்படுத்தி அவர் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *