
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது!
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் நகராட்சியில் திமுக, பாஜக தலா 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் திமுக, பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பத்மநாபபுரம் நகராட்சியை யார் கைப்பற்றுவது என முடிவெடுக்கும் இடத்தில் சுயேட்சைகள் இருக்கின்றனர்..