

திமுக அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், ஆவடி நாசர் மகன்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான தேர்தல் பிப்ரவரி19 தேதி நடைபெற்றது. நேற்று 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 268 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த தேர்தலில் திமுக அமைச்சர்களின் மகன்கள் வெற்றி பெற்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி 7வது வார்டில் போட்டியிட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் மொக்தியார் மஸ்தான் வெற்றி பெற்றார். அதேபோல பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் மகன் ஆசிம் ராஜா ஆவடி மாநகராட்சி 4 வார்டில் 626 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வெற்றி பெற்றார்.
