திருச்சி முக்கொம்பிற்கு வரும் 23 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
சென்னை நேப்பியர் பாலம் போல் திருவானைக்காவல் சோதனைச் சாவடி பகுதியில் கட்டபட்டுள்ள பாலத்தை கடந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் செல்லும் காட்சி பார்ப்பவர்களைப் பரவசப்படுத்துகிறது. கடந்த 8ஆம் தேதி வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு படிப்படியாக உயர்ந்து தற்போது 23 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது.
டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக, காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.