• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திருப்பூரில் ஆஞ்சநேயர் போல் வேடமணிந்து.., பற்களால் தேங்காய் உடைத்த வாலிபரால் பரபரப்பு..!

Byவிஷா

Nov 17, 2023

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காரியசித்தி ஆஞ்சநேயர் கோவில் முன்பு வாலிபர் ஒருவர் ஆஞ்நேயர் போல் வேடமணிந்து பற்களால் தேங்காய் உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொங்கலூர் ஊராட்சிக்குட்பட்ட அழகுமலை கோவில் பிரசித்தி பெற்ற முருகர் தலமாக இருந்து வருகிறது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தினந்தோறும் வெவ்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. கந்த சஷ்டி விழாவின் நான்காம் நாளான நேற்று காரிய சித்தி ஆஞ்சநேயர் சந்ததி முன்பு வட மாநில இளைஞர் ஒருவர் தரிசனம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு அருள் ஏற்பட்ட நிலையில் ஆஞ்சநேயர் போலவே பாவனை செய்து ஆஞ்சநேயர் சிலையிடம் ஹிந்தியில் பேசியவாறு பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த பத்துக்கு மேற்பட்ட தேங்காய்களை தனது பற்களால் கடித்து உரித்தார். அனுமன் போலவே பாவனை செய்து அவர் தேங்காய்களை பற்களால் உறித்ததை கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டதோடு தங்கள் கைப்பேசிகளில் படம் பிடித்து அந்த வடமாநில இளைஞரை பயபக்தியுடன் வழிபட்டனர். சிறிது நேரத்திற்கு பின்பு அந்த இளைஞர் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டே இயல்பு நிலைக்கு திரும்பினர். இதனால் கோயில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.