• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில்..,அய்யனார் குதிரை எடுப்பு விழா..!

ByKalamegam Viswanathan

Jun 1, 2023

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில் அய்யனார் குதிரை எடுப்பு விழா விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ அய்யனார் சுவாமி, ஸ்ரீ ஊர் காவலன் சாமி, ஸ்ரீ கொடிப்புலி கருப்புசாமி கோவில் குதிரை எடுப்பு விழா நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த பங்குனி மாதம் கொடி கம்பம் நடப்பட்டது. குதிரை ஊர்வலம் முன் செல்ல அய்யனார் சுவாமி ஊர்காவலன் சாமி கொடிபுளி கருப்புசாமி மற்றும் பரிவார தெய்வங்களின் குதிரை எடுப்பு விழா மேளதாளம் முழங்க, அதிர்வேட்டுக்கள் வெடிக்க கச்சராயிருப்பு கிராமத்தில் நான்கு தெரு வீதிகளில் ஊர்வலமாக வந்து திருக்கோவில் முன்பாக நிறுத்தப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கச்சிராயிருப்புகிராம மூன்று பங்காளிகள் அருள்மிகு ஸ்ரீ அய்யனார் சுவாமி, ஸ்ரீ ஊர் காவலன் சாமி, ஸ்ரீ கொடிப்புலி கருப்பசாமி கோவிலில் கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். ஏற்பாடுகளை கிராம மூன்று பங்காளிகள், கிராம பொதுமக்கள், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்..