• Tue. Oct 3rd, 2023

சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா தொடக்கம்..!

Byவிஷா

Jun 1, 2023

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
சங்கரன்கோவில் சங்கர்நகர் 2-வது தெருவில் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கோவிலில் அமைந்துள்ள கொடிமரத்தில் காலை 4.30 மணிக்கு கொடியேற்றப்பட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவில் செங்குந்தர் அபிவிருத்தி சங்க தலைவர் சங்கர சுப்பிரமணியன், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் குருநாதன், சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி, தி.மு.க. மாவட்ட இளைஞரணி சரவணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிகர நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா 10-ம் திருநாளான வருகிற 9-ந் தேதி மாலை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் அபிவிருத்தி சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *