• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு..,

BySeenu

Jul 11, 2026

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டியின் 2026-27 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கோவையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில், ஓய்வுபெற்ற ஜி.எஸ்.டி உதவி ஆணையர் டோலா திருப்பதி 8-வது தலைவராகவும் , இளம் தொழிலதிபர் ரோட்டேரியன் விக்ரம் புதிய செயலாளராகவும் அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

முன்னதாக, 2025-26 ஆம் ஆண்டின் தலைவராக இருந்த ரோட்டேரியன் சண்முகராஜ் தனது பதவிக்காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, புதிய தலைவர் சோலா திருப்பதி அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.முன்னாள் தலைவர் சண்முகராஜ் பேசுகையில், “கடந்த ஆண்டில் பழங்குடியின மக்களுக்கான வீட்டு வசதித் திட்டம் , கோவை கிட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்திய பிரம்மாண்ட விளையாட்டுத் திருவிழா, தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ மற்றும் பல் சிகிச்சை முகாம்கள் எனப் பல கம்யூனிட்டி திட்டங்களைச் சிறப்பாகச் செய்து முடித்துள்ளோம். இந்தப் புதிய குழு தொடர்ந்து சாதனைகள் படைக்க எங்களது ரோட்டரி குடும்பத்தின் முழு ஆதரவு என்றும் இருக்கும் என்றார்.

புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ரோட்டேரியன் சோலா திருப்பதி பேசுகையில், எங்கள் கிளப் ஒரு சமுதாயத்தை மையமாகக் கொண்ட அமைப்பாகும். இதில் 7 பெண் உறுப்பினர்கள் உட்பட பல திறமையான இளைஞர்கள் உள்ளனர். இந்த ஆண்டு மாவட்ட ஆளுநர் ஆர். மாருதி அவர்களின் வழிகாட்டுதலின்படி, புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் நோக்கில், அடிமட்ட அளவிலேயே மாசுக் கட்டுப்பாட்டை வலியுறுத்தும் தூய்மைத் திட்டங்களில் தீவிர கவனம் செலுத்த உள்ளோம்” என்றார்.

மேலும், “இ-வேஸ்ட் மேலாண்மை குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சமூக சமையலறை கொண்டு வருதல், பழங்குடியின வீட்டு வசதித் திட்டத்தைத் தொடருதல் போன்ற பல முன்னோடிப் பணிகளைச் செய்யவுள்ளோம். இதற்கான நிதி திரட்டும் நோக்கில் அறிவியல் கண்காட்சி மற்றும் உடற்தகுதிக்கான ‘ஜும்பா’ நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. நான் எழுதியுள்ள ‘பிளைண்டிங் செலிப்ரேஷன்’ புத்தகத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் 40 விழுக்காட்டைப் பார்வையற்றோர் பள்ளிக்கு நன்கொடையாக வழங்க உள்ளோம்.

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி நிறுவனத் தலைவர் பி.ஏ. பிரபுசங்கர், செயலாளர் ராஜசேகர், பொருளாளர் கனகராஜ், மாவட்டத் துணை ஆளுநர் சுவாமிநாதன், ஏ.ஜி ராமகிருஷ்ணன், மாவட்ட இயக்குநர்கள், ஜி.ஜி.ஆர்-கள் மற்றும் புதிய செயலாளர் விக்ரம் ஆகியோரின் பேராதரவோடு இந்த ஆண்டு மிகச் சிறப்பான சமூக சேவைகளை வழங்குவோம் என்று உறுதியளித்தார்.
இவ்விழாவில் ரோட்டரி அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.