
“மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு” என்று பெயரளவில் மட்டும் கொண்டு இயங்கும் சில தொண்டு நிறுவனங்கள் மத்தியில், மக்கள் சேவையை முதன்மையாகவும், முழுமூச்சுடன் செய்துகொண்டிருக்கிறது, என் நாடு என் தேசம் அறக்கட்டளை!
கொரோனா காலத்தில், மிகவும் அவதியுற்ற சாலையில் பட்டினியாய் கிடந்த மக்களுக்காக தொடங்கப்பட்டதே இந்த அறக்கட்டளை! உண்ண உணவில்லாதவர்கள், வீடில்லா அகதிகள், மனநலம் பாதிப்படைந்தோர், உடல் ஊனமுற்றோர், கணவனை இழந்த பெண்களுக்கு உதவி செய்து வருகின்றனர்! மேலும், ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர்களுக்கும் உணவு, இரவு நேரங்களில் டீ போன்றவையும் வழங்ப்படுகிறது! இவ்வாறு இவர்களது சேவை பணி நீண்டுகொண்டே செல்கிறது!
இந்நிலையில், சொரியோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட மஹாலக்ஷ்மி என்ற 47 வயது பெண்மணி, அறக்கட்டளை நிறுவனரான பவித்ரா சிவலிங்கத்தை நாடியுள்ளார்! அவருக்கு மருத்துவ உதவியுடன், வீட்டுக்கு தேவையான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது!
இதுகுறித்து பவித்ரா சிவலிங்கம் கூறுகையில், “மஹாலக்ஷ்மி என்ற 47 வயது பெண்மணி, மதுப்பழக்கத்தால் அடிமையான தன் கணவனால் கைவிடப்பட்டு, தன் இரு பெண் குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வருவதாகவும், தான் சொரியோசிஸ் நோயால் அவதிப்படுவதாகவும், இந்த நோயால் வேறு எந்த இடத்திலும் வேளைக்கு செல்ல முடியாததால் தனக்கு உதுவுமாறும் எங்களை அணுகினார்! அவரது நிலைகண்டு அவருக்கு உதவும் வகையில், 2,000 ரூபாய்க்கான காசோலையும், அவர்களது குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்களை மாதம் தவறாமல் கொடுக்க வேண்டுமென முடிவுசெய்து, அதனை செயல்படுத்தி வருகிறோம் என்றார்!
மேலும், உதவி இன்றி நாடி வருவோருக்கு மட்டுமின்றி, யாரிடம் கேட்பது என்று தெரியாமல் பசியோடு காத்திருக்கும் சாலையோர மக்கள் 100 பேருக்கு உணவளிக்க தயாராகி கொண்டிருக்கிறார் பவித்ரா சிவலிங்கம்!