

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருபவர் பேரறிவாளன். ஆயுள் தண்டனை கைதியான இவருக்கு கடந்த சில மாதங்களாக சிறுநீரக தொற்று ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது தமிழகஅரசு. இதையடுத்து ஒவ்வொரு முறையும் பரோல் முடியும் தருவாயில் பேரறிவாளன் மருத்துவ சிகிச்சைக்காக பரோலை நீடிக்க உத்தரவிட வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்து வந்தார். அதன் அடிப்படையில் பேரறிவாளனுக்கு இதுவரை ஏழு முறை பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேரறிவாளனுக்கு நேற்றுடன் பேரறிவாளனின் பரோல் முடிந்த நிலையில் சென்னை புழல் சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அவர் அழைத்து செல்லப்பட இருந்த நிலையில் மீண்டும் அவருக்கு எட்டாவது முறையாக 30 நாட்கள் பரோளை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தொடர் சிகிச்சைக்காக மேலும் ஒரு மாதம் பரோல் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
