

திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் அந்த நிறுவன இயக்குனர்கள் இருவருக்கும் 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 171 கோடி ரூபாய் அபராதம் .
திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பாசி நிதி நிறுவனம் 58 ஆயிரத்திற்கும் அதிகமானோரிடம் 930 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு சட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான கதிரவன் உயிரிழந்து விட்ட நிலையில், இயக்குநர்கள் கமலவல்லி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் ஆஜராகினர். வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ரவி, இருவரும் குற்றவாளிகள் என அறிவித்தார்.இருவருக்கும் 27 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்த நீதிபதி, 171 கோடியே 74 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையினை சாட்சியம் அளித்தவர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதி ரவி உத்தரவிட்டார்.
