

திருப்பூரில் உள்ள பாப்பீஸ் ஓட்டலில் நடைபெற்ற உற்பத்திப் பொருள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
திருப்பூர் திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில் நடைபெற்ற தொழில் மண்டல மாநாட்டில் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் சார்பில் தயாரிக்கப்பட்ட விதவிதமான ஆடைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. மேலும் திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசால் திருப்பூர் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த கண்காட்சியும் அமைக்கப்பட்டு இருந்தது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு தொழில் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட உற்பத்தி பொருட்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தது. அதனையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அவர்களுக்கு தொழில் முனைவோர் தயாரிப்பு முறைகள், வணிகம் குறித்து எடுத்துரைத்தனர்
