கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கொல்லம் – தென்காசி ரயில் பாதை வழித்தடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், ரயில் எண். 06102, கொல்லம் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வழி: தென்காசி, கடையநல்லூர், மதுரை) இன்றும் மட்டும் (17.10.2021) மாற்று பாதையில் இயக்கப்பட உள்ளது.
கொல்லம் – புனலூர் – செங்கோட்டை – தென்காசி வழியாக இயங்காமல் கொல்லம் – திருவனந்தபுரம் – நாகர்கோவில் டவுண் -திருநெல்வேலி – அம்பாசமுத்திரம் – தென்காசி – கடையநல்லூர் – மதுரை வழியாக இயக்கப்பட உள்ளது. ஆகவே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் தங்களது சரியான பயண நேரத்தை உறுதி படுத்திக்கொள்ளவும்.