• Thu. Apr 25th, 2024

தி.மு.க.வின் நான்கு மாத நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்று உள்ளாட்சி தேர்தல் வெற்றி – திருமாவளவன் பேட்டி…

Byகுமார்

Oct 18, 2021

மதுரை நீதிமன்றம் அருகில், இயற்கை யோகா மருத்துவ ஆரோக்கிய சிகிச்சையக திறப்பு விழாவிற்கு வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் தலைமை வகித்தார். சிகிச்சை மையத்தை பத்திர பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தொல் திருமாவளவன் கூறியதாவது,
தமிழகத்தில் இயற்கை மருத்துவம் தொடர்பான கல்லூரி மருத்துவமனைகள் பெருகிவருகின்றன.

இதன் மூலம் 3500க்கும் மேற்பட்ட இந்திய அரசு இயற்கை மருத்துவத்திற்கு போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை, உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
இயற்கை மருத்துவர்களுக்கான வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் இதனை கவனத்திற்கு எடுத்து செல்வோம்.

அலோபதி மற்றும் இந்திய மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கும் நிலையில் இயற்கை மருத்துவம் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இதனால் இயற்கை மருத்துவம் படிக்க தயங்குகின்றனர், அதிக கல்லூரிகள் மற்றும் வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் இயற்கை மருத்துவத்திற்கான பிரிவுகளை அனுமதிக்க வேண்டும்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் இயற்கை மருத்துவத்திற்கான பிரிவை சேர்க்க வேண்டும். இயற்கை மருத்துவம் குறித்து போதிய விழிப்புணர்வு அளித்தால் அறுவை சிகிச்சையில் குறைய வாய்ப்புள்ளது என கூறினார்.

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி, 9மாவட்டங்கள் என்றாலும் இந்த முடிவுகள் ஒவ்வொரு கட்சியின் பலத்தை காட்டியுள்ளது. அதிமுக சரிவை சந்தி்த்துள்ளது 4 மாத நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்று இந்த வெற்றி.

அரசியல் சக்தியாக விசிகவை பொதுமக்கள் அங்கிகரித்துள்ளார்கள் என்பதை விசிகவின் வெற்றி நிருபித்துள்ளது. மக்களுக்கு நன்றி.

வி.சி.கவின் நீண்ட நாள் கோரிக்கையான மாநில அளவிலான எஸ்.சி.எஸ்.டி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதற்கு தமிழக அரசிற்கு நன்றி.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய பணியாளர்கள் ஊதிய உயர்வு கோரி தொடர்ந்து போராடிவருகிறார்கள். இது குறித்து முதல்வரை சந்தித்து பேசியுள்ளேன். தமிழக அரசு தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தர படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களை கண்காணிக்கும் குழுவில் நான் இடம் பெற்றுள்ளேன், மாநில வளர்ச்சி கண்காணிப்பு குழுவில் இடம்பெற்றுள்ளேன்.

சமூக நீதி அரசியலை பேசும் மண்ணில் சனாதான சக்திகளுக்கு துணைபோகும் வகையில் அரசியலை கையில் எடுக்க வேண்டாம் என நான் ஏற்கனவே சீமானுக்கு சுட்டிகாட்டியுள்ளேன்.

மதம் என்பது வேறு ஆன்மீகம் என்பது வேறு. மதம் நிறுவனம் ஆன்மீகம் என்பது உணர்வு. எதிர்பாராத வகையில் நாம் தமிழர் கட்சி அரசியல் சனாதானவாதிகளுக்கு துணை போகிறது. உலகளாவிய மதமாக கிறிஸ்துவம், இஸ்லாமியமும் உருவாகியுள்ளது.

இந்து மதம் உலக மதமாக மாறவில்லை. ஏன் என இந்து மதம் சார்ந்த தலைவர்கள் சிந்திக்க வேண்டும். ஆசியா கண்டத்தில் கூட இந்து மதத்தை பின்பற்றும் நாடு இல்லை. அரசியல் மனிதநேயம், சாதியின் பெயரால் பிரிவுகள் கொண்ட மதமாக இந்து மதம் உள்ளதால் உலக நாடுகள் ஏற்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்காரர்கள் சீமான் எங்களுக்கானவர் என்று கூறுவது போல சீமானின் செயல்பாடு மாறிவிட்டது.

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது ஜனநாயகம் மற்றும் நாட்டிற்கு பாதுகாப்பு இல்லை. இந்திய விமானம், பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஆகியவை தனியார் மயமாகிவருகிறது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டை எவ்வாறு காப்பாற்றுவது என்ற அச்சம் உருவாகியுள்ளது. 2024ல் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க அனைவரும் ஒண்றினைய வேண்டும். சசிகலா அரசியல் வருகை என்பது அவரது தனிப்பட்ட உரிமை மற்றும் அவரது விருப்பம் அது குறித்து கருத்துசொல்ல எதுவுமில்லை, என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *