• Wed. Apr 24th, 2024

வெளவால் மாதிரிகளில் நிபா வைரஸுக்கு நோய்எதிர்ப்புத்திறன்.. ஆய்வு முடிவில் தகவல்..!

Byவிஷா

Sep 30, 2021

நிபா வைரஸ் பாதிப்புக்கான நோய் எதிர்ப்பு திறன் வெளவால்களில் இருப்பது அவற்றின் மாதிரிகளின் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.


கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த 4ம் தேதி நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். பழந்தின்னி வெளவால்களின் உமிழ்நீர் மூலம் நிபா தீநுண்மி பரவுகிறது.

நிபா வைரசால் பாதிக்கப்படுவோருக்குக் காய்ச்சல், தலைவலி, தசைவலி, வாந்தி மற்றும் தொண்டைப் புண் ஏற்படும். இதைத் தொடர்ந்து தலைச்சுற்றல், மயக்கம், கடுமையான மூளைக்காய்ச்சல் ஆகியவை ஏற்படலாம்.


சிலருக்கு வித்தியாசமான நிமோனியா மற்றும் கடுமையான சுவாசப் பிரச்னைகளும் ஏற்படும். சில நாட்களில் நோயாளிகள் கோமா நிலைக்குச் செல்லவும் வாய்ப்புள்ளது.

இதையடுத்து உஷாரான மாநில சுகாதாரத்துறை, அப்பகுதி முழுவதும் வீடுகள் தோறும் வெளவால்களின் மாதிரிகளை சேகரித்து மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியது.


கோழிக்கோடு பகுதி முழுவதும் நிபா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் புனே ஆய்வக முடிவில் நல்ல செய்தி கிடைத்திருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோழிக்கோடு பகுதியில் சேகரிக்கப்பட்ட வெளவால்களின் மாதிரியில் நிபா வைரஸ் பாதிப்புக்கான நோய் எதிர்ப்பு திறன் கண்டறியப்பட்டிருக்கிறது. சில மாதிரிகளின் ஆய்வக முடிவுக்காக காத்திருக்கிறோம்” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *