சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் எனில் எடப்பாடி பழனிச்சாமி 8 கண்டிசன்களை போட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சசிகலாவின் அலை அதிமுகவில் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது நிலைப்பாட்டை கறாராக கூறிவிட்டார். இதனை பின்பற்ற கொங்கு மண்டல முன்னாள் அமைச்சர்களும் தயாராக இருக்கின்றனர். ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மட்டும் வாயை மூடிமௌனம் காத்து இருக்கும் நிலையில் சசிகலாவின் ஆதரவாளர்களுக்கு பெரும் குழப்பமாக இருக்கிறது.
இதற்கிடையில் தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் அதிமுகவினர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த நிலையில் ஒற்றை தலைமை ஒன்றுபட்ட அதிமுக என்ற நிலை இருந்திருந்தால் வெற்றி வாகை சூடி இருக்கலாம் என்று பேச ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் ஓ பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதை வைத்து எல்லாம் பார்க்கும்போது ஓ பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு ஆதரவாக இருப்பதாக பேசி வருகின்றனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் சற்று இறங்கி வருவதாக பேசப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர வேண்டுமெனில் சில கண்டிஷன்கள் எடப்பாடி பழனிச்சாமி போட்டுள்ளார் என தகவல். இதில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர வேண்டும். மேலும் சசிகலா கட்சியின் ஆலோசனை குழுத் தலைவராக மட்டுமே இருக்கலாம். இது போன்ற மொத்தம் எட்டு கண்டிஷன்களை போட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பன்னீர் செல்வத்திடம் சமீபத்தில் கறாராக பேசியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து அரசியல் விமர்சகர்கள் இந்த நிகழ்வு எந்த அளவிற்கு உண்மை என்பதை பின்வரும் நாட்களில் தெரியவரும் என்று கூறுகிறார்கள்.
