• Tue. Mar 21st, 2023

தலைமை பதவியை அடித்து பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது -சசிகலா

ByA.Tamilselvan

Jul 11, 2022
sasikala

தலைமை பதவியை அடித்து பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது என வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.
“பொதுக்குழுவில் நிதிநிலை அறிக்கைகளை அறிவிக்க முடியாது. அப்படி இருக்கையில், இதை எப்படி பொதுக்குழுவாக ஏற்றுக்கொள்ள முடியும். அதிமுக பொதுக்குழு நடந்ததே செல்லாது” என்று, வி.கே.சசிகலா தெரிவித்தார்.இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: “இன்றைய நிகழ்வுகளை பார்க்கும்போது, அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேரும் நேரம் வந்துவிட்டது. தலைமை பதவியை அடித்து பிடிக்க நினைத்தால், அது நிலைக்காது.பணம் மற்றும் அதிகாரத்தை வைத்து அடைந்த எந்த பதவியும் நிலைக்காது. சட்டப்படி செல்லாது. நிழலுக்காக சண்டையிட்டு நிஜத்தை இழந்து விடக்கூடாது. ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு, நிஜத்தை நிச்சயம் அடைவோம்.ஒன்றரை கோடி தொண்டர்களும், பொதுமக்களும் என்னை தான் ஆதரிக்கிறார்கள். பொதுக்குழுவில் நிதிநிலை அறிக்கைகளை அறிவிக்க முடியாது.அப்படி இருக்கையில், இதை எப்படி பொதுக்குழுவாக ஏற்றுக்கொள்ள முடியும். அதிமுக பொதுக்குழு நடந்ததே செல்லாது” இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *