மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68 வது ஆண்டாக 100 ஆடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடக அணைகள் நிரம்பி வருகின்றன.
கர்நாடகா மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த 8-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98 அடியாக இருந்தது. இந்த நிலையில், காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 100 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 60 ஆயிரம் கன அடிநீர் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு 12,000 கன அடியில் இருந்து 15,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணை வரலாற்றில் 68-வது ஆண்டாக அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.