• Fri. Mar 24th, 2023

பாஜக இல்லை என்றால் நாங்களும் உங்கள் கூட்டணியில் இல்லை? இபிஎஸ்ஸை மிரட்டும் கூட்டணி கட்சிகள்

கலகலக்கிறது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல். களம் திரும்பிய இடங்களில் எல்லாம் ’‘பெரியோர்களே தாய்மார்களே… வாக்காளப் பெருக்குடி மக்களே’’ என்று பிரச்சார வாகனங்கள் பரபரத்துக் கொண்டிருக்க, காலரை தூக்கி விடாதக்குறையாக தலைநிமிர்ந்து அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் தொகுதி வாக்காளர்கள்..
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈவெரா, கடந்த ஜனவரி 4ந் தேதி திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அதனைத் தொடர்ந்து காலியாக இருந்த ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இம்மாதம் 27ந் தேதி வாக்குப் பதிவு நாள்.
தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 31ந் தேதி துவங்கியுள்ளது.
இந்நிலையில் இத்தொகுதியில் போட்டியிட அரசியல் கட்சிகள் மும்முரமாக பணியார்றி வருகின்றனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்பே திமுக கூட்டணியில் தேர்தல் வேலை துவங்கியது. கடந்த பொதுத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கியது தி.மு.க. ஆகவே இடைத் தேர்தலில் மீண்டும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸுக்கே ஒதுக்கியது.
காங்கிரஸ் வேட்பாளாராக மறைந்த எம்.எல்.ஏ. திருமகனின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளார்.


இளங்கோவனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேட்பாளராக இளங்கோவன் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே திமுக பிரச்சாரத்தில் களம் இறங்கியது. தமிழக வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் திமு.க.வினர் கை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு வலம் வரத் தொடங்கினர். இடையில் திமுக அமைச்சர்களான கே.என்.நேரு, ஏ.வா.வேலு, செந்தில்பாலாஜி, நாசர் உட்பட மேலும் சிலர் ஈரோட்டில் முகாமிட்டு ஒவ்வொருவருக்கும் ஒதுக்கித்தரப்பட்டுள்ள பகுதிகளில் இளங்கோவனுக்காக ஓட்டு கேட்டு வருகின்றனர். இவர்களோடு வேட்பாளர் இளங்கோவனும் ஓட்டு கேட்டு வலம்வருகிறார். இந்நிலையில் அதிமுக வட்டாரத்தில் அதிமுக இபிஎஸ், ஓபிஎஸ் இரு அணிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்க போட்டி போட்டுக் கொண்டு தாமதம் செய்தனர். இரண்டு அணிகளுமே பாஜகவை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே ராஜா தங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் கேட்டதோடு, ஓபிஎஸ் பாஜக போட்டியிட விரும்புகிறது என்றால் நாங்கள் விட்டுக்கொடுப்போம் என்றும் சொல்லி வந்தார். கடந்த ஒரு வார காலமாக இபிஎஸ் ஈரோடு பகுதியில் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி பாஜக நிலைப்பாடு தெரிந்து கொள்ள விரும்பினார். ஆனால் பாஜகவும் ஈபிஎஸ் என்று பதில் சொல்லாமல் மௌனம் காத்துக்கொண்டிருந்தது, மூத்த தலைவர்கள் செங்கோட்டையன் உட்பட பல்வேறு தலைவர்களுடன் இபிஎஸ் ஆலோசனை தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பாஜக தங்களுக்கு வேண்டாம் என்று ஒரு இறுதி முடிவுக்கு வந்தனர். பாஜக இல்லாமலேயே தொடர்ந்து அந்த கூட்டணியில் இடம் பெறாமலேயே தனித்து நிற்க வேண்டும் என்கிற முடிவோடு ஈரோட்டில் தேர்தல் காரியாலயம் திறந்து வைத்து அதற்கு தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி பெயர் மாற்றம் செய்து கொடுத்திருக்கிறார் பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்திருக்கிறார் இபிஎஸ். இதை தொடர்ந்து தனது அணி சார்பாக இரண்டு கிழக்கு தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு அதிரடியாக அறிவித்தார் இபிஎஸ்.

கே. எஸ். தென்னரசு

இதை அடுத்து இபிஎஸ் முகாம் சுறுசுறுப்படைந்தது வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இருக்கும் கே எஸ் தென்னரசு ஏற்கனவே ஈரோடு தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தவர்.

சென்ற முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கள் கூட்டணி கட்சி சார்பாக தமகவுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. சுமார் ஒன்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தாமாக தோல்வியுற்றது. ஒருவேளை தென்னரசுக்கே அந்த தேர்தலில் சீட் கொடுத்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார். அதனால் இம்முறை ஈரோடு கிழக்கு தொகுதி கைப்பற்றி விடலாம் என்று துடிக்கிறார் இபிஎஸ். அதனால் தான் தென்னரசுவிற்கு இப்போது வாய்ப்பு கொடுத்திருக்கிறார்’ வேட்பாளர் தென்னரசு என்றதும் திமுக கூட்டணி முகாம் கொஞ்சம் சலசலத்து போயிருக்கிறது என்பது உண்மைதான். மக்களோடு மக்களாக கலந்திருக்கும் ஒரு எம்எல்ஏ ஆக வலம் வந்தவர் தென்னரசு எளிமை நாயகன். தொழிலாளர்கள் முதல் முதலாளிகள் வரை அனைவரையும் சந்தித்து பேசும் திறன் பெற்றவர். இதற்கிடையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

மேனகா நவநீதன்

ஒன்னாம் தேதி காலை இபிஎஸ் அதிரடியாக வேட்பாளர் அறிவித்தார் என்பதால், பதிலுக்கு ஓபிஎஸ் சார்பில் மாலையில் வேட்பாளர் அறிவித்தார். தங்களின் வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை திடீரென்று அறிவித்தார் ஓபிஎஸ் அறிவித்துவிட்டு பாஜக திடீரென்று போட்டியிட வருவதாக விரும்பினால் அவர்களுக்கு விட்டு கொடுத்து விடுவோம். இன்று கூடவே ஒரு கம்மா போட்டு வேட்பாளர் அறிவித்திருக்கிறார் 48 வயதான செந்தில்குமார் ஈரோட்டை சேர்ந்தவர்.

செந்தில் முருகன்

எம்பிஏ நிதி மேலாண்மை படித்த செந்தில் முருகன் லண்டனில் நிதி ஆலோசகராக பணியாற்றி வந்துள்ளார். கொரோனா காலத்தில் லண்டனிலிருந்து திரும்பியவர் இந்தியாவில் தங்கிவிட்டார். அதிமுகவில் உறுப்பினர் மட்டுமே. இபிஎஸ் ஓபிஎஸ் என்று கட்சி இரண்டு அணிகளாக பிரிந்து பொழுது ஓபிஎஸ் பக்கம் சேர்த்து கொண்டார். இவருக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை. முதலியார் சமூகத்தை சேர்ந்தவர் என்னதான் வேட்பாளர் அறிவித்தாலும் ஓபிஎஸ் மீது அவர்கள் அணியினரே மிகுந்த மதிப்பில் இருப்பதாக தெரிகிறது. பாஜகவை அனுப்பி இப்படி நடு ஆற்றில் நிற்கிறோம். இன்னும் ஓபிஎஸ் பாசம் தாமரை மீது இருக்கிறது. தாமரை விசேஷம் கொண்டவர் எப்படி இரட்டை இலை காப்பாற்றுவார் என்று இப்பொழுது யோசிக்க துணிந்து விட்டனர் அவர்கள் பணியில் இருக்கும் மூத்த தலைவர்கள் தேர்தல் முன்பாகவே ஓபிஎஸ் அணிகூட காலியாக வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிகிறது. இடைத்தேர்தலில் இடைக்கால வேட்பாளரை அறிவித்தது எங்கள் அணியாக தான் இருக்கும் என்று நொந்து போய் சொல்லுகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

சற்று முன் கிடைத்த செய்தி: தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் தான் பிஜேபி உடன் அதிமுக கூட்டணி அமைத்து கடத்த தேர்தலை சந்தித்தது தொடர்ந்து இந்த கூட்டணி பெயர் இயங்கி வருகிறது. இந்நிலையில் பிஜேபி ஆதரிக்கவில்லை என்பதால் கூட்டணி பெயர் மாற்றம் செய்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் பெயரை தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று பெயர் மாற்றம் செய்து பிரதமர் படம் பாஜக தலைவர்கள் படம் இல்லாமல் நோட்டீஸ்கள் பேனர்கள் தயார் செய்துள்ளனர் இந்த விஷயம் பாஜகவுக்கு அதிர்ச்சி தந்துள்ளது திடீரென்று இப்பொழுது கிளைமாக்ஸாக இபிஎஸ் அவசர அவசரமாக தேசிய ஜனநாயக கூட்டணி என்று பழைய பெயரே நீட்டிக்க செய்தாராம் ‘அரசியல் டுடே’ டாட் காம் இது தொடர்பாக விசாரித்த போது..,

பாஜக இல்லாமல் பெயரை மாற்றக்கூடாது . பாஜக எந்த முடிவு சொல்லாமல் இப்படி திடீரென்று கூட்டுறவின் தலைப்பை மாற்றினால் பெரு விபரீதமாகிவிடும் நாங்கள் எல்லாம் பாஜக ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறோம் நாங்கள் உங்கள் கூட்டணி தொடர வேண்டும் என்றால் பழைய பெயரில் கூட்டணி தொடர்ந்தால் தான் நாங்கள் இருப்போம் இல்லை என்றால் நாங்கள் உங்கள் கூட்டணியில் இருந்து விலகி விடுவோம் என்று த.மா. கா. ஜி கே வாசன் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர் எல்லாம் கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாம் இ பி எஸ் ஐ மிரட்டி விட்டார்களாம். அதை அடுத்து படிந்தாரம் இபிஎஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *