பிரபல சிப் நிறுவனமான இன்டெல் தங்களது நிறுவனத்தில் இருந்து 340 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
சமீபகாலமாக ஐடி துறையில் நடந்து வரும் பணிநீக்கங்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வகையில் தற்போது இன்டெல் நிறுவனத்தின் செலவுகளை குறைப்பதற்காகவும், நடப்பு ஆண்டில் லாபத்தை அதிகரிப்பதற்காகவும் பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வருடம் ஜடி நிறுவனங்களுக்கு ஒரு மோசமான ஆண்டாக தொடங்கியுள்ளது என்றே கூறலாம். பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களான மெட்டா, அமேசான், பிலிப்ஸ், சேல்ஸ்ஃபோர்ஸ், காயின்பேஸ், மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கானோரை பணி நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை தொடர்ந்தால், இந்திய பொருளாதாரம் மந்த சரிவை சந்திக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.