• Wed. Dec 11th, 2024

4-வது முறையாக தோல்வி அடைந்த முன்னாள் ஐஏஎஸ்..!

Byகாயத்ரி

Feb 22, 2022

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது.

சென்னையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி 7.68 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். தலித் மக்கள் பிரச்சனைகளிலும், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த சமூக சமத்துவப்படை நிறுவனர், முன்னாள் ஐஏஎஸ் ப.சிவகாமி சென்னை மாநகராட்சி 99-வது வார்டில் போட்டியிட்ட நிலையில் 4-வது முறையாக தோல்வியடைந்துள்ளார்.