

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை வந்துள்ள முடிவுகளின்படி திமுக
மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றுள்ளது.
மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் திமுக 21 இடங்களில் முன்னிலை இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திமுக வெற்றியை அடுத்து சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் குவிந்த தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து ஆடி, பாடி வெற்றியை கொண்டாடினர். இந்நிலையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை திமுக முக்கிய நிர்வாகிகள் சந்தித்து உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.இந்நிகழ்வில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் வாகை சந்திரசேகர் ஆகியோர் இருந்தனர்.
