• Thu. Apr 25th, 2024

அத நான் செலவு பண்ணிட்டேன்’.. மோடி மீது பழிபோட்ட ஆசாமி கைது!

By

Sep 15, 2021

வங்கி கணக்கில் தவறுதலாக வந்த ரூபாய் 5.5 லட்சத்தை திருப்பி தர மறுத்த இளைஞர் அந்த பணம் பிரதமர் மோடி கொடுத்த பணம் என்று காரணம் கூறி மிரள வைத்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் உள்ளக ககாரியா என்ற மாவட்டத்தில் ரஞ்சித் தாஸ் என்ற இளைஞரின் வங்கி கணக்குக்கு தவறுதலாக ரூ.5.5 இலட்சம் வந்தது. இதனை அடுத்து சுதாரித்துக்கொண்ட வங்கி ஊழியர்கள் உடனடியாக ரஞ்சித்தை தொடர்பு கொண்டு அந்த பணத்தை திருப்பிக் கொடுக்குமாறும், அவருடைய வங்கி கணக்கில் தவறுதலாக அந்த பணம் வந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் இளைஞர் ரஞ்சிதா அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்ததோடு, அந்த பணம் பிரதமர் மோடி சொன்ன ரூபாய் 15 லட்சத்தில் முதல் தவணை தான் இந்த 5.5 லட்சம் ரூபாய் என்று நினைத்துதான் செலவு செய்து விட்டதாகவும், அதனால் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என்றும் வங்கி அதிகாரிகளிடம் அவர் வாக்குவாதம் செய்தார்.

`கடந்த மார்ச் மாதம் எனது வங்கிக் கணக்கில் 5.5 லட்சம் ரூபாய் பணம் வந்தடைந்த போது நான் மிகவும் மகிழ்ந்தேன். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் பணம் அனுப்புதாக வாக்குறுதி கொடுத்துள்ளார் என நான் நம்புகிறேன். அதனால் இந்தப் பணம் எனக்கு கிடைத்த போது, பிரதமர் மோடி எனக்கு அனுப்பிய முதல் தவணை இது என நான் எண்ணி, முழுத் தொகையையும் செலவு செய்துவிட்டேன். இப்போது என்னிடம் எனது கையிலோ, வங்கிக் கணக்கிலோ எந்தப் பணமும் இல்லை’ எனக் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார் ரஞ்சித் தாஸ். இவர் மான்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து வங்கி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இளைஞர் ரஞ்சித் தாஸை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது சுவிஸ் பேங்கில் இந்தியர்களின் பணம் கோடிக்கணக்கில் இருப்பதாகவும் அந்த பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்ச ரூபாய் பிரித்துக் கொடுப்பேன் என்றும் பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதி கொடுத்திருந்தார். இதனால் அனைவரின் வங்கி கணக்கிலும் மோடி பணம் செலுத்துவார் என இன்றும் தகவல் பரவி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *