• Fri. Apr 19th, 2024

மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை

By

Sep 15, 2021 ,

மாணவர்களை வகுப்புக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு்ள்ளது.

தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் திறப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவுப்புக்கு தடை விதிக்கக்கோரி அப்துல் என்பவர் மதுரை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அந்த மனுவில், மாணவர்கள் கண்டிப்பாக வகுப்புக்கு வர வேண்டும் என்று சில பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக மனுதாரர் புகார் அளித்துள்ளார்.

இன்னும் 18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை. கொரோனா அலை இன்னும் முழுமையாக முடியாத நிலையில், மூன்றாவது ஏற்பட்டால் சிறுவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பல பள்ளிகள் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் அமர்வு தலைமையில் வந்தபோது, மாணவர்களை வகுப்புக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கட்டாயப்படுத்திய பள்ளிகளின் விவரங்களை மனுதாரர் தெரிவித்ததால் அவற்றின் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக அரசு முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு, வழக்கை விசாரணையை செப்டம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *