கடந்த சில நாட்களாக சென்னை போன்ற மீன் விற்பனை அதிகமாக உள்ள பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தி ,கெட்டு போன மீன்களை விற்பனை செய்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் , நீலகிரி மாவட்டத்தில் உள்ள மீன் கடைகளில் பழைய மீன்கள் விற்கப்படுவதாக பொதுமக்களிடையே தொடர்ந்து புகார் எழுந்துள்ளது .
இதனையடுத்து, உதகை, குன்னூர் ,கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தில் 10க்கும் மேற்பட்ட கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டு பினாயில் ஊற்றி அகற்றினர்.
மேலும், கெட்டுப்போன மீன்களை விற்கும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுப்பட்டு 5 ஆயிரம் ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டது . இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்